பிஎல் போட்டியின்போது, கொல்கத்தா அணி வீரர்களிடம் கேப்டன் தினேஷ் கார்த்திக் சிடுசிடுத்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பு கிடைக்க கோபமம் அவசியம் என்றவர், திட்டினால்தான் சிறப்பாக விளையாடுவார்கள் என்றால் அதையும் செய்யலாம் என கூறினார்.

ஐபிஎல் தொடரில் 52வது லீக் போட்டியில் நேற்று நடைபெற்றது. பஞ்சாபுக்கும், கொல்கத்தா வுக்கும் இடையே நடைபெற்ற இந்த போட்டியில், பஞ்சாப் அணி  183 ரன்களை குவித்த நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்  வீரர்களிடன் கோபமாக பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியானது. இது குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், ஆமாம்,  வீரர்களைத்தான் கடிந்துகொண்டே என்று ஒப்புக்கொண்டவர், நேற்றைய ஆட்டத்தின்போது, பீல்டர்களும் பந்துவீச்சாளர்களும் நடந்து கொண்ட முறை சரியில்லை என்று குற்றம் சாட்டினார்.

எங்கள் வீரர்களிடம் இருந்து நல்ல உழைப்பும் முடிவும் கிடைக்க கோபம் அவசியம் என்றால் அதையும் செய்யலாம், அதில் தவறு இல்லை என்றும் தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணி 18 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.