டில்லி

பிஎல் 2018 லீக் போட்டியில் டில்லி டேர் டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது.

நேற்று பெரோஷா கோட்லா மைதானத்தில் ஐபில் 2018 லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டில்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதின.    டாஸ் வெற்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய டில்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.   துவக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டத்தி இழந்தது பெங்களூரு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  தொடர்ந்து ஆடிய வீரர்களால் மீண்டும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.    பெங்களூரு அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புடன் வெற்றி இலக்கை அடைந்தது.