சென்னை:

மிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த மீதமுள்ள 6 ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7 போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவித்த ஐபிஎல் நிர்வாகம்,  கடந்த 10ந்தேதி கடுமையான பாதுகாப்புகளுடன்  ஒரு போட்டியை நடத்தியது.

இந்நிலையில் மேலும் நடைபெற உள்ள 6 போட்டிகளை சென்னையில் இருந்து ரத்து செய்து வேறு மாநிலங்க ளில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டில்லியில்  நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகிகள் கூட்டத்தில் போட்டி நடைபெறுவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மற்றைய 6 போட்டிகளும் மகாராஷ்டிரா மாநிலம்  புனேவில் உள்ள விளையாட்டரங்கத்தில் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.

அதன்படி  வரும்  20ந்தேதி , 28ந்தேதி,  30ந்தேதி ஆகிய தேதிகளிலும் அடுத்த மாதம் (மே)  5, 13, 20 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 6 போட்டிகளும் புனேவில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.