IPL 2016 இன்று இரண்டாவது போட்டி , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இடையில் பெங்களுருவில் நடைபெற்றது . டாஸ் வென்ற டெல்லி பெங்களுரு அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தது.
images (8)
பெங்களுரு அணியின் துவக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் புஜீயத்தில் அவுட் ஆனது மூலம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர் . அதன் பின்னர் விராத் கோலி மற்றும் டீ வில்லர்ஸ் ஜோடி சேர்ந்து 100 ரன்கள் எடுத்தனர் .மேலும் கோலி மற்றும் வாட்சன் ஜோடி தங்கள் அதிரடி ஆட்டம் மூலம் பெங்களுரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தனர். பெங்களுரு அணி சார்பில் கோலி 79 ரன் மற்றும் டீ வில்லர்ஸ் 55 ரன்கள் எடுத்தனர்.
images (7)
191 ரன்கள் இலக்கை டெல்லி அணி ஆரம்பம் முதல் கணக்கிட்டு விளையாட டெல்லி அணியின் க்வின்டன் டீ காக் மற்றும் கருன் நாய்யர் அதிரடியாக விளையாடி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
ஆட்ட நாயகன் க்வின்டன் டீ காக் 51 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.
பெங்களுரு அணியில் பேட்டிங் ஜாம்பவான்கள் இருந்தும் அவர்கள் பெளலிங் சாதாரணமாக அமைந்ததால் வரும் போட்டிகள் அவர்களுக்கு சவாலாக அமையும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 191/5 (கோலி 79, டீ வில்லர்ஸ் 55, வாட்சன் 33, சாமி 2/34) டெல்லி டேர்டெவில்ஸ் (க்வின்டன் டீ காக் 103, கருன் நாய்யர் 54)