இன்று IPL 2016யின் 19வது போட்டி குஜராத் லயன்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
Kohli
வாட்சன் மற்றும் கோலி துவக்க வீரர்களாக பேட்டிங் செய்தனர். வாட்சன் சொற்ப ரன்களுக்கு அவுட் அக டீ வில்லியர்ஸ் கோலியுடன் ஜோடி பெங்களூரு அணியின் ஸ்கோர் 7 ஓவர் முடிய 50 ரன்கள் எடுக்க டீ வில்லியர்ஸ் , தம்பே வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் கோலி-ராகுல் ஜோடி பெங்களூர் அணியை வலுவான நிலைக்கு எடுத்து சென்றனர். கோலியின் பொறுமையான ஆட்டம் மூலம் T 20 யில் முதல் சதம் அடித்து சாதனை புரிந்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தனர்.

Karthik
கார்த்திக்

வெற்றிக்கு 183 என்ற இலக்குடன் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித் மற்றும் மெக்கல்லம் வேகமாக ரன்கள் எடுக்க ஆட்டம் சூடு பிடித்தது. ஸ்மித் மற்றும் மெக்கல்லம் தொடர்ந்து அவுட் ஆக கார்த்திக் மற்றும் ரெய்னா நிதானத்துடனும் , ரன் ரேட் தேவைகேற்ப ரன்கள் எடுத்தனர். இவர்களது ஆட்டம் குஜராத் அணி வெற்றி பெற பெரிதும் உதவியது.
பெங்களூரு அணியின் பேட்டிங் பலமாக இருக்க அவர்களது பௌலிங் தொடர்ந்து சொதப்ப , அதன் மூலம் அணியின் வெற்றிக்கு சவாலாக உள்ளது என கோலி ரசிகர்கள் தங்களது சமுக பக்கங்களில், தோல்விக்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.
குஜராத் 182/4 (கார்த்திக் 50*, மெக்கல்லம் 42, ஸ்மித் 32) பெங்களூர் 180/2 (கோஹ்லி 100*, ராகுல் 51*)