சென்னை

புதிதாக வெளி வந்துள்ள இந்தியாவில் வாங்குவதை விட ஹாங்காங்கில் வாங்குவதே மலிவாக இருக்கும்.  இதோ அதற்கான விவரம் :

ஆப்பிள் நிறுவனம் 3 ஐஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது தெரிந்ததே.  இவற்றில் ஐ ஃபோன் 8 மற்றும் ஐ ஃபோன்8+ ஆகியவற்றின் விலை முந்தை ஐ ஃபோன்7 மற்றும் ஐ ஃபோன் 7+ ஐ விட அதிகமாகவே உள்ளது.  அத்துடன் இல்லாமல் முற்றிலும் புதிய ஃபீசர்களைக் கொண்ட ஐஃபோன் X விலையானது இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கும் என தெரிய வருகிறது.

நவம்பர் 9 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த ஃபோன் 64ஜிபி மாடல் ரூ.89000 ஆகும்.  இதிலேயே அதிகம் மெமரி உள்ள 256ஜிபி ஃபோன் ரூ.102000 ஆகிறது.  அதாவது அதிக விலை உள்ள ஃபோன்களிலேயே மிக அதிக விலை உள்ள ஃபோன் என சொல்லலாம்.

அதே வேளையில் மற்ற நாடுகளில் இந்த மாடல் ஃபோனின் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது. அதிலும் ஹாங்காங்கில் மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் என தெரிகிறது.  இந்தியாவில் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதை விட ஹாங்காங் சென்று வாங்கி வருவது மிகவும் மலிவாகும்.  இதில் விமானப் பயணச்சீட்டு விலையும் சேர்ந்தே கணக்கிட்டாலும் மலிவாகவே உள்ளது.

இதோ அந்தக் கணக்கு

ஐ ஃபோன் X (256 ஜிபி) இந்திய பண மதிப்பில் ரூ. 102000

ஐ ஃபோன் வ் (256 ஜிபி) ஹாங்காங் பண மதிப்பில் 9888 ஹாங்காங் டாலர்கள்.  இன்றைய மதிப்பின் படி இந்திய ரூபாயில் 80999.

நவம்பர் மாதம் முதல் வாரம் இப்போதே விமானப் பயணம் புக் செய்தால் டிக்கட் விலை குறைந்தது ரூ. 17800 மட்டுமே.  முழுச் செலவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமான டிக்கட் :  ரூ. 17800

ஐ ஃபோன் X 256 ஜிபி : ரூ 80999

இதர செலவுகள் : சுமார் ரூ. 2000 – 3000

மொத்தம் ரூ. 1 லட்சம்

சேமிப்பு : ரூ 2000

இவை எல்லாம் ஏதோ காமெடி போல தெரியலாம்.  ஆனால் நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.  யாருமே ஐ ஃபோன் வாங்க மட்டும் ஹாங்காங் செல்வதில்லை.  எனவே நீங்கள் சுற்றுலாவும் செல்கிறீர்கள். மலிவு விலையில் ஐ ஃபோனும் வாங்குகிறீர்கள்.  இந்தியாவில் மட்டும் அதிக விலையில் ஐ ஃபோன் விற்கப்படுவதன் நோக்கம் இங்கு எவ்வளவு விலை வைத்தாலும் வாங்கி விடுவார்கள் என்னும் எண்ணம்தான்