டில்லி:

என்எக்ஸ்  மீடியா வழக்கில்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கு மறுத்து வரும் நிலையில், ஜாமின் கோரி உச்சநீதி மன்றத்தில் இன்று அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை எப்போது நடைபெறும் என தலைமைநீதிபதி இன்று மாலைக்குள் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்துக்கு நவராத்திரி பண்டிகையையொட்டி அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை என்பதால், சிதம்பரத்தின் மனு அவசர வழக்காக விசாரிக்கப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது,ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தால், அதை பயன்படுத்தி,  அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  ஐஎன்எஸ் மீடியா நிறுவனத்துக்கு  சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறிவெளிநாட்டு நிதி திரட்ட அனுமதி பெற்றதாகவும், இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு டில்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், அவரை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க சிறப்பு நீதிமன்றத்தில்  சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது ஜாமின் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஜாமின்  கோரி உச்சநீதி மன்றத்தில் சிதம்பரம் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நவராத்திரை பண்டிகையையொட்டி, உச்சநீதி மன்றத்துக்கு ஒருவார காலம் விடுமுறை விடப்படுவதால், ஜாமின் மனு மீதான விசாரணையை உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.