தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 19 ம் தேதி துவங்க உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

டெல்லி சென்ற அமைச்சர் உதயநிதி இதற்கான அழைப்பை பிரதமரிடம் இன்று வழங்கினார்.

பிரதமரை சந்தித்த உதயநிதி தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழை வெள்ளம் மற்றும் புயலால் பாதித்த மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் வலியுறுத்தினார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் வேறு பல மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.