இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் பாடி பிரபலமடைந்தவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம்.
78 வயதாகும் வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வாணி ஜெயராம் உடலைக் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கொண்டுசென்றனர்.
தலையில் ஏற்பட்ட காயமே வாணி ஜெயராம் உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
படுக்கை அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து வாணி ஜெயராம் தலையில் பலமாக அடிபட்டுள்ளது.
நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் இருந்த ரத்த கரை ஆகியவற்றை வைத்து தடவியல் சோதனையும் செயப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில், வாணி ஜெயராம் வீட்டுக்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணை இன்னும் தொடர்ந்து வரும் நிலையில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று பிற்பகல் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.