மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராம் வீட்டில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

வாணி ஜெயராம் உடலுக்கு திரைத்துறையினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து இறுதி ஊர்வலம் துவங்கிய நிலையில் அவருக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்துகின்றனர்.