நியூயார்க்

நா சபையின் கீழ் இயங்கி வரும் சர்வதேச காவல் துறையான இண்டர் போல் தேடி வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் 139 பாகிஸ்தானியர் உள்ளனர்.

ஐ நா சபையின் கீழ் இயங்கி வரும் சர்வதேச காவல்துறை இண்டர் போல் என அழைக்கப்படுகிறது.    சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை கண்காணிக்கும் இந்த துறை சமீபத்தில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.   இந்த பட்டியலை முழுமையாக வெளியிடாததால் மொத்தம் இடம் பெற்றுள்ள பயங்கரவாதிகள் எத்தனை பேர் என சரிவர தெரியவில்லை.

வெளியான  பயந்தரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மட்டும் 139 பேர் உள்ளனர்.    இந்த பட்டியலில் ஒசாமா பின்லேடனின் வாரிசு என சொல்லப்படும் அய்மன் அல் ஜவாகிரி முதல் இடத்தில் உள்ளார்.   அவர் மற்றும் அவருடைய குழுவினர் அனைவரும் பாகிஸ்தான் நாட்டில் உள்ளதாக இண்டர்போலின் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஹஃபிஸ் சையத்

மேலும் லஷ்கர் ஈ தொய்பாவுடன் சம்மந்தப்பட்டவர் என பாகிஸ்தானின் மில்லி முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஹஃபீஸ் சையத் குறிப்பிடப் பட்டுள்ளார்.   மேலும் மும்பையில் 166 பேர் கொல்லப்பட்ட பயங்கர வாத தாக்குதலில் லஷ்கர் ஈ தொய்பா மற்றும் ஹஃபீஸ் சையதுக்கு தொடர்புள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தாவூத் இப்ராகிம்

அத்துடன் இந்தியாவை சேர்ந்த தாவூத் இப்ராகிம் கஸ்கர் தற்போது பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுடன் பாகிஸ்தானில் வசித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.  மேலும் கராச்சி நகரின் நூராபாத் பகுதியில் ஒரு சொகுசு பங்களாவில் தாவூத் வசித்து வருவதாகவும் கூறபட்டுள்ளது.

இந்த பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானுக்காக பயங்கர வாத தாக்குதல்களை நடத்தியவர்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது.  அத்துடன் இந்த அறிக்கையில் பலர் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மறைந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.