டெல்லி: பிரபல இணைய நிறுவனமான கூகுள் இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 453 ஊழியர்களை  பணிநீக்கம் செய்தது அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கூகுள் இந்தியாவின் நாட்டின் தலைவரும் துணைத் தலைவருமான சஞ்சய் குப்தாவிடமிருந்து மின்னஞ்சல் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள பெரு நிறுவனங்கள், பொருளாதார பாதிப்பை காரணம் காட்டி ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறது.  உலகெங்கிலும் உள்ள டெக் நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 453 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது, கூகுள் நிறுவனம். கடந்த மாதம் 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது 453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக கூகுள் இந்தியாவின் நாட்டின் தலைவரும் துணைத் தலைவருமான சஞ்சய் குப்தா மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி உள்ளது. இது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.