உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு ரயில்வேயில் உள்ள மூன்று ரயில் நிலையங்கள் இன்று ஒருநாள் இளஞ்சிவப்பு நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களில் லோகோ பைலட், டெக்னீசியன், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் பெண்களே கவனித்துக் கொள்வார்கள்.

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையம், மொஹாலி மற்றும் ஃபிரோஸ்ஷா ஆகிய ரயில்நிலையங்கள் பிங்க் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்டேஷன் மாஸ்டர் முதல் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர், சிக்னல்களை மாற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள், பாயிண்ட்ஸ்மென்கள் என அனைத்தும் பிங்க் நிறமாக சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.