சென்னை: தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு (2021) செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சர்வதேச காற்றாடி திருவிழா 2வது முறையாக நடைபெற உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மேலும் புகழை சேர்த்துள்ளது.

சர்வதேச காத்தாடி திருவிழா உலகளவில் பல பங்கேற்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. ஆகஸ்டு மாதம்  13 ஆம் தேதி சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.  இந்த திருவிழாவில் கலந்துகொள்ள உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வர இருக்கின்றனர்.

ஏற்கனவே சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்திருந்தது. அதுபோல கடந்த ஆண்டு முதன்முறையாக சர்வதேச காற்றாடி திருவிழாவும் மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில். இந்த ஆண்டு 2வது முறையாக மீண்டும் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற உள்ளது.

சர்வதேச காற்றாடி திருவிழா  வரும் ஆகஸ்டு  மாதம் மாமல்லபுரத்தில் ஆகஸ்டு மாதம்  12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோலாகலமாக நடைப்பெற உள்ளது.  வழக்கமாக, காற்றாடி திருவிழா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலேயே நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.

இந்த காத்தாடி திருவிழா சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் மாமல்லபுரத்தில்  உள்ள டிடிடிசி ஓஷன் வியூவில் நடைபெறும் இந்த பிரமாண்ட காற்றாடி திருவிழாவில், அமெரிக்கா, தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் குழுக்கள் பங்கேற்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், பட்டம் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாமல்லபுரம் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது.