சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதன் எதிரொலியாக, அனைத்து சார்பதி வாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு, சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பல இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது,  கணக்கில் வராத ரூ. 3000 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், முறையான கணக்கு காட்டப்படவில்லை என்றும்  தகவல் வெளியானது. இதையடுத்து, இந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பதவி விலக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

மேலும்,  திருச்சி உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த ஐ.டி ரெய்டின்போது, அந்த அதிகாரிகளுக்கு  உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றும்,  2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் கோரப்பட்ட நிலையில் வழங்கப்பட்டன என்றும் தெரிவித்துள்ள பதிவுத்துறை,  ஆவணம் பதிவுக்கு முன்பதிவு செய்யும் முன்பே ஆவணதார்களிடமிருந்து பெறும் வகையில் பதிவுத்துறையின் ஸ்டார் 2.0 மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேலும்,  பதிவு பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தினை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது என்று கூறியிருப்பதுடன்,  ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்கப்பட்டுள்ளதால் பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும், அனைத்து சார்பதிவாளர்களும் வருமான வரித்துறையின் இணைய தளத்தில், பதிவு தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த 78 சார்பதிவாளர்கள் அதிரடி இடமாற்றம்!

ஆட்சியர், கோட்டாட்சியர், வருவாய்த்துறை அலுவலகங்களில் தரகர் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தடை!