சென்னை: தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்  கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி,  உள்ளாட்சி துறைக்கு 22,218 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளதுடன், உள்ளாட்சி மானியத் தொகை 5,314 கோடியிலிருந்து3,979 கோடியாக நிதிக்குழு குறைத்துள்ளது என்று மத்தியஅரசை குற்றம் சாட்டினார்.

மேலும்,  அத்திக்கடவு -அவினாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும் என்றும்,  தாமிரபரணி திட்டம் 2022 மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தொரிவித்துள்ளார்.,

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி இடைக்கால பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,  முதற்கட்டமாக 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய்  இணைப்பு வழங்கப்படும்  என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.‘

‘கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மதிய உணவுத் திட்டத்துக்காக 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் கிராமப் புற வீட்டுவசதித் திட்டம் 3,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஊரக சாலை திட்டத்துக்காக 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு, நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 2,360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் 2,470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்,  முன் வளத்துறைக்காக 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு, நீர்ப்பாசனம் 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடபடுவதாகவும்,

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக 39, 941 கோடியில் 62 முதலீடுகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு 3,717.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.