இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்வு

Must read

சென்னை: ஓபிஎஸ் இன்று தாக்கல் செய்த தமிழகஅரசின் இடைக்கால பட்ஜெட்2021-22: அரசு ஊழியர்களின் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாகவும், நெல்லுக்கான நிவாரணம் ரூ.20ஆயிரமாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்  கலைவாணர் அரங்கில் கூடிய சட்டப்பேரவையில், தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி,  அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகை 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக குறிப்படப்பட்டுஉள்ளது. மேலும்,  குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 10லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது
இயற்கை பேரிடரில் பாதிக்கப்படும் நெல்லுக்கான நிவாரணம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.13,000 ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் 15,900 ஹெக்டேர் அளவில் மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது மரங்களின் பல்லுயிர்த் தன்மையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

 கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்

சரபங்கா நீரேற்று திட்டம், அத்திகடவுஅவினாசி திட்டம் விரைவில் நிறைவுபெறும்

ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன

மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு

தமிழக காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு

தலைவாசலில் அமைக்கப்படும் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவுக்கு கூடுதலாக ரூ.634.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article