மதுரை: ஆபாசத்தை பரப்பும் தொலைக்காட்சிகளில் வெளியாகும், கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள், சோப்பு, வாசனை திரவியங்கள் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடியாக தடை விதித்துள்ளது.
சமீபகாலமான தொலைக்காட்சிகளில் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு ஆபாச விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சோப்பு, வாசனை திரவியங்கள், கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் உள்பட பல விளம்பரங்கள் வெளியாகி, பொதுமக்கள் குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுவில், பாலியல் ரீதியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவு 12 மணி முதல் காலை 6 மணிக்குள் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை பின் தொடரப்படுவதில்லை என்றும், அதுபோல உள்ளாடை, கருத்தடை சாதங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களின் விளம்பரங்களில் அதீத ஆபாச காட்சிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, ஆபாசத்தை பரப்பும் வகையிலான சோப்பு, வாசனை திரவியங்கள், கருத்தடை சாதனங்கள் உள்ளிட்ட விளம்பரங்கள், ஆபாசத்தை பரப்பும் வகையிலுள்ள பாலியல் பிரச்னை தொடர்பான மருத்துவ விளம்பரங்களும் ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், இதுதொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.