தேசிய அளவில் ஜூனியர்களுக்கான தடகளப் போட்டிகள், கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றது. நேற்று தமிழகம் சார்பாக பங்கேற்ற கொலேசியா என்ற 9-ம் வகுப்பு மாணவி முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.

kolesia_3078118hகொலேசியா ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுல், குண்டு எறிதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய டிரையத்லான் போட்டியில் விளையாடி தங்கம் வென்றுள்ளார். ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டரை 13.26 விநாடியில் கடந்தும், நீளம் தாண்டுதலில் 4.95 மீட்டர் தாண்டியும், குண்டு எறிதலில் 6.55 மீட்டர் தொலைவு எறிந்தும் 1,577 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கொலேசியா, வடக்கன் குளம் புனித தெரசா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகின்றார். தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தாய் புஷ்பம் கூலி வேலை செய்து இவரை படிக்கவைத்து வருகின்றார். கொலேசியவிற்கு அக்கா, தம்பி உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் இதே போல் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டுள்ளார்.