டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீரர்கள் திணறல்; தென் ஆப்பிரிக்க 171 ரன்கள் குவித்தது

Must read

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று துவங்கியது. தென் ஆப்ரிக்க அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் டிவில்லியர்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அணியில் இல்லாதது இதுவே முதல் முறை. காயம் காரணமாக இருவரும் விளையாடவில்லை.

philanderமுதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க வீரர்கள் கணித்தது போல், பந்துவீச்சுக்குச் சாதகமாக பிட்ச் அமைந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து தொடக்க வீரர்களான வார்னரும் பர்ன்ஸும் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அதன்பின் ஒருமுனையில் ஸ்மித் இருக்க மறுமுனையில் வீரர்கள் வந்த வேகத்தில் சென்றார்கள். ஸ்மித், மென்னியைத் தவிர மற்ற வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை. மொத்தத்தில் 32.5 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்தநிலையில் அனைவரும் ஆட்டமிழந்தனர். பிளாண்டர் 5 விக்கெட்டுகளையும், அபாட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய தென்னாப்ரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் 171 ரன்கள் எடுத்து 86 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கடுமையாக முயன்றும் தென் ஆப்ரிக்க வீரர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். அவர்களால் 5 விக்கெட்டுக்கும் அதிகமாக எடுக்கமுடியவில்லை.

More articles

Latest article