சென்னை: ஒருங்கிணைந்த இன்ஜினியரிங்  சேவைகளுக்கான தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி, ஜனவரி 6, 7இல் தேர்வுகள் நடைபெறும் என டிஎனபிஎஸ்சி உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பருவமழை காரணமாக, மழை கொட்டியதால், சென்னை மட்டுமின்றி தென்மாவட்டங்களும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. இதனால், டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஏற்கனவே ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வை (TNPSC) ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக, பாமக, விசிக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும், தென்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, டிஆர்பி தேர்வுகளை ஒத்தி வைத்ததுபோல, இந்த தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், இதை ஏற்க மறுத்து, திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சேவைகளில் வரும் பல்வேறு துறைகளில் உள்ள 369 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை  தொடர்ந்து,  இந்த பணிக்காக   தமிழகம் முழுவதும் 59,630 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு வரும் ஜன.6, 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள்  திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி உறுதி செய்துள்ளது.