டில்லி

ந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா மூன்றாம் அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரம் முன்னாள் பிரதமர் தேவிலாலின் மகனுமான ஓம் பிரகாஷ் சவுதாலா இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன் எல் டி) கட்சியின் தலைவரும் ஆவார்.  ஹரியானா மாநிலத்தில் அதிகமாக உள்ள ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள கட்சி ஐ என் எல் டி ஆகும்.   இந்த கட்சியின் தலைவர் பாஜகவுக்கு எதிராக மூன்றாம் அணி அமைக்க முயன்றுள்ளார்.

டில்லியில் இது குறித்து ஐ ஜ த கட்சியின் செய்தி தொடர்பாளரிடம் சவுதாலா நேரில் பேசி உள்ளார்.  மேலும் அக்கட்சி தலைவர் நிதிஷ்குமாருடனும் தொலை பேசியில் பேசி உள்ளார்.  அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ், சிரோமணி அகாலி தள பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

மேலும் இந்த மூன்றாம் அணியில் மாயாவதி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் இணைக்க ஓம் பிரகாஷ் சவுதாலா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி கட்சி நிறுவனர் தேவிலாலின் பிறந்த நாள் அன்று மூன்றாம் அணியை உருவாக்க சவுதாலா திட்டமிட்டுள்ளார்.

ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது ஆசிரியர் தேர்வு ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சமீபத்தில் வெளி வந்தார்.  சவுதாலா சிறையில் இருந்த போது அவரது பேரன் துஷ்யந்த் சவுதாலா புதிய கட்சி ஒன்றைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது அவர் பாஜகவுடன் இணைந்து ஹரியானா துணை முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.