ஜார்ஜியா மற்றும் யோவா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஆய்வில் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி வழக்கமான ஒன்றாக ஊசி மூலம் போடப்படுவதாக இல்லாமல், மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக எலிகளுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும், விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட பரிசோதனைக்கு முன்னேறியிருக்கும் இந்த மருந்து மனிதர்களிடையே பயன்படுத்த ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இது நல்ல பலனளிப்பதோடு, ஊசி மருந்தைப் போல் சேமித்து வைக்க சிரமமிருக்காது என்றும், குளிர்பதனப் பெட்டியிலேயே வைத்துக்கொள்ளலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.