தகவல் தொழில்நுட்பம், கணினி, தமிழ் இணையம், தமிழ் மின்னணு உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதே உத்தமத்தின் தலையாய நோக்கமாகும். தமிழ் மொழி, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மென்மேலும் சிறந்து ஓங்கி விளங்க உத்தமம் அயராது உழைத்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்குமேல் இயங்கிவரும் இந்நிறுவனமானது ஆண்டிற்கு ஒருமுறை உலகத் தமிழ் இணைய மாநாடொன்று நடத்திவருகிறது. இதில் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சிக்கட்டுரைப் படைப்பு, கணினி பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மக்கள் அரங்கம் என்று அனைத்தும் சிறப்பாக செயல்படுகிறது.
இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை பொதுக்குழுவின் உதவியுடன் நடத்தப்படும் செயற்குழுவிற்கான தேர்தலில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிருந்து வெற்றிபெற்றவர்கள் : திருவாளர்கள் இராமசுகந்தன், இராமலிங்கம் பொன்னுசாமி, சக்திவேல் இராமசாமி, சுப்ரமணியம், தங்கராஜா தவரூபன், இளந்தமிழ், கல்யாணசுந்தரம், முத்தையா அண்ணாமலை, வாசு இரங்கநாதன்.
உலகளாவிய அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள், தமிழ் மொழி அறிஞர்கள், கணினி வல்லுனர்கள் நிறைந்த இச் செயற்குழுவின் பணி சிறக்க பத்திரிகை டாட் காம் வாழ்த்தி மகிழ்கிறது. உத்தமம் பற்றி மேலும் அறிந்துகொள்ள, https://www.infitt.org/ என்ற இணையதளத்தை அணுகவும். தமிழ் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் இந்நிறுவனத்தில் இணைந்து செயல்பட உத்தமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.