சரித்திரம் படைத்தது நாசா…சூரியனின் வளிமண்டலத்தை தொட்டது நாசாவின் ஆய்வு விண்கலம் பார்க்கர்

Must read

சூரியனை ஆய்வு செய்ய 2018 ம் ஆண்டு நாசா அனுப்பிய பார்க்கர் விண்கலம் சூரியனின் வளிமண்டலத்தை அடைந்திருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2025 ம் ஆண்டு வரை மொத்தம் 15 முறை சூரியனை சுற்றிவந்து ஆய்வு செய்ய இருக்கும் இந்த விண்கலம் இதுவரை ஒன்பது முறை சூரியனை முழுமையாக சுற்றி வந்துவிட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 8.1 மில்லியன் மைல் தொலைவில் இருந்தபோது காந்த அதிர்வலைகளை உணர்ந்ததாக கூறும் ஆராய்ச்சியாளர்கள் அப்போதே சூரியனின் வளிமண்டலத்தை தொட்டுவிட்டதாக கூறியது.

தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 4.89 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் இந்த பார்க்கர் விண்கலம் வரும் ஜனவரி மாதம் மேலும் நெருங்கி 3.83 மில்லியன் மைல் தொலைவில் செல்லும் என்று கூறியிருக்கிறது.

சூரிய ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கும் இந்த பார்க்கர் விண்கலம் சூரிய அறிவியலில் மாபெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்த விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சூரிய மண்டலத்தின் நெருங்கிய நட்சத்திரம் பற்றிய முக்கியமான தகவல்களை கண்டறிய பெரிதும் உதவும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article