இந்தோனேசியா: கடலில் விழுந்த விமானத்தை தேடும்பணி தீவிரம்…

Must read

இந்தோனேசியா,
டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் ,  பங்கல் பினாங்கில் இருந்து ரியு தீவுக்கு புறப்பட்ட சிறிய ரக போலீஸ் விமானம் ஒன்று திடீரென்று தகவல் துண்டிக்கப்பட்ட நிலையம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
indonesica
அந்த ‘எம்.28 ஸ்கை ட்ரக்’ விமானத்தில் மொத்தம் 15 பேர் பயணம் செய்ததாகவும், அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டதாகவும், அந்த விமானத்தை தேடும் பணி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அந்த விமானத்தில் 8 போலீசாரும், 5 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ததாக  தெரிய வந்துள்ளது. அந்த விமானம், கடலில் 24 மீட்டர் ஆழத்தில் விழுந்து மூழ்கி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் தலைவர் ஹென்றி பாம்பாங் சோய்லிஸ்ட்யோ  கூறுகையில்,
‘‘விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை விபத்து நடந்த இடத்தில் உள்ள கிராமவாசிகள் கண்டுள்ளனர் அந்த பகுதியில் இருந்து தான் ஒரு இருக்கையும், போலீஸ் ஆவணங்கள், ஒரு செல்போன் உள்ளிட்டவற்றுடனான ஒரு பையும் முதலில் கண்டெடுக்கப்பட்டன’’ என குறிப்பிட்டார்.
கடலில் இருந்து போலீஸ் சீருடைகள் மற்றும் பிற உடைகள் மீட்கப்பட்டதை  இந்தோனேசிய டி.வி. சேனல்கள்  படங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும், இந்தோனேசியா கடற்படை, கடல் போலீஸ் படையினர் 518 சதுர கி.மீ. பரப்பளவில் விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   மேலும்  சிங்கப்பூர் விமானமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

More articles

Latest article