கோல்ட் கோஸ்ட்

ஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டியில் இன்று மகளிருக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.

53 கிலோ பிரிவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை சஜிதா  சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று இந்தியா ஒரு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளது.

இது வரை இந்தப் போட்டிகளில் இந்தியா 3 பதக்கங்கள் பெற்றுள்ளது.