டில்லி

ரும் 2023 இல் 12 தனியார் ரயில்கள் இயக்கப்பட்டு 2027 க்குள் 151 தனியார் ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வேயில் தனியார் நிறுவனங்கள் சிறிது சிறிதாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.   முதன் முதலாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனியார் மூலம் இயக்கப்பட்டது.  கடந்த மாதம் இந்திய ரயில் 151 தனியார் ரயில்கள்  109 ஜோடி வழித்தடங்களில் இயக்கப்படும் என அறிவித்தது.  இந்த திட்டம் ரூ.30000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும்

இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் 2022 – 23 ஆம் வருடத்தில் 12 தனியார் ரயில்கள் இயக்கப்படும்.   அதன் பிறகு 2023-24 ஆம் வருடம் 45 ரயில்களும், 2025-26 ஆம் வருடம் 50 ரயில்களும் மீதமுள்ள 44 ரயில்கள் அதற்கு அடுத்த வருடமும் இயக்கப்படும்.  வரும் 2026-27 ஆம் வருடம் தனியார் ரயில்களின் எண்ணிக்கை 151 ஆக இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் 70% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.  இவை அனைத்தும் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை செல்லும் ரயில்களாக இருக்கும்.   இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.