புதுச்சேரி:
புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய மாநில கவர்னர் கலந்துகொள்ள மறுத்துள்ளதால்,  புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் தொடர் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.  பகல் 12 மணிக்கு புதுச்சேரி பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். முன்னதாக  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி,   இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதம் (ஏப்ரல், மே, ஜூன்) 3 மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அதற்கான காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதற்காக மாநில அரசு,  ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, கடந்த 3 நாட்களுக்கு முனபு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, சட்டமன்றம் இன்று (20ந்தேதி)  கூட்டப்பட்டு கவர்னர் உரையுடன் கூட்டத் தொடங்கும்  என்றும்,  அதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது,
இதற்கிடையில் மத்தியஅரசின் அனுமதியைத் தொடர்ந்து,  கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு  கவர்னர் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்டது.  ஆனால், கவர்னர் கிரண்பேடி  தனக்கு உரையை படிக்க  கூடுதல் நேர அவகாசம் வேண்டும் திடீரென தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கேள்விக்குறியானது.
இதனால் நேற்று இரவு முதல்வர் நாராயணசாமி, மாநில அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில்,  கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, கவர்னர் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று கவர்னருக்கு தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.
ஆனால், இன்று காலை கவர்னர்  கிரண்பேடி சட்டசபைக்கு வந்து உரையாற்ற வராததல், சபையை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர்,  ட்டமிட்டபடி பகல் 12.05 மணி அளவில் மீண்டும் சட்டசபையை கூட்டி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்று காலை திட்டமிட்டபடி சட்டமன்றம்  சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்தனர். அதுவரை அவர் வராததால் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.
சட்டசபையில் கவர்னர் நிகழ்ந்த வேண்டிய உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறிய சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார்.