இறுதி நேரத்தில் விமான விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட இண்டிகோ விமான பயணிகள்

Must read

மும்பை

தொழில்நுட்ப கோளாறுடன் வானில் பறக்க இருந்த விமானம் இறுதி நேரத்தில்  விமானியால் நிறுத்தப்பட்டது.

இண்டிகோ விமான சேவை நிறுவன விமானம் ஒன்று மும்பையில் இருந்து கிளம்பியது. அந்த விமானத்தில் 155 பயணிகள் இருந்துள்ளனர். விமானம் கிளம்பி ஓடுபாதையில் ஓடி மேலே பறக்க இருந்தது. அப்போது விமான ஓட்டி விமான சக்கரங்கள் பழுதடைந்ததை இறுதி நேரத்தில் கண்டுபிடித்துள்ளார். உடனடியாக அவர் விமானத்தைக் கீழிறக்கி உள்ளார். இதனால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிறுவன மேலாளர் ஏக்தா, “இந்த விமானத்தில் பயணம் செய்த 155 பயணிகளும் பத்திரமாக தரை இறக்கப்பட்டுள்ளனர். விமான சக்கரத்தில் பழுது ஏற்பட்டதை இறுதி நேரத்தில் கண்டறிந்த விமானி உடனடியாக விமானத்தைக் கீழே இறக்கியதால் இவர்கள் தப்பி உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதில் பயணம் செய்த ஒரு பயணி வேகமாகச் சென்று மேலே ஏறிய விமானம் ஒரு சத்தத்துடன் உடனே கீழிறங்கியது. இது பயணிகளான எங்களுக்கு மிகவும் அச்சத்தை அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார், இந்த விமான சக்கரங்களில் உள்ள பழுது உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த  விமானம் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

More articles

Latest article