தாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே துறை அதிரடியாக உயர்த்தியுள்ளது. புதிய கட்டணம்  நேற்று செப் 9ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது.
இதன்படி ஒவ்வொரு 10 % டிக்கட்டிற்கும் 10 %அளவு கட்டணம் உயர்த்தபடுகிறது.  இதனால் டிக்கெட்டுகளின் விற்பனைக்கேற்ப 10இலிருந்து 50 சதவிகிதம் வரை விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
maxresdefault
நடுத்தரவர்க்க மக்கள் முதுகில் மிகுந்த பளுவைச் சுமத்தும் இந்தக் கட்டண உயர்வு ஒருபக்கம் இருக்க, முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், மற்றும் எக்ஸிகியூட்டில் பெட்டிகளுக்கு எந்தவித விலை உயர்வும் இல்லை என்ற அறிவிப்பு சாதாரண மக்களுக்கு எரிச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்தர கட்டணத்தை உயர்த்தினால் அது விமானக் கட்டணங்களுக்கு இணையாக சென்றுவிடுவதால் முதல்வகுப்பு பயணிகள் இரயிலை புறக்கணித்துவிட்டு விமானத்தில் சென்றுவிடுவார்கள் என்பதால் முதல்தர வகுப்பு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிகிறது.
தட்கல் கட்டணங்களிலும் பெரிதும் மாற்றம் இல்லை. அதில் அடிப்படைக் கட்டணத்திலிருந்து மட்டும் ஒன்றரை மடங்கு உயர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ரூ.500 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.