டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியில் ஸ்பின்னரான தமிழ்நாட்டைச் சேர்ந்த  அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் .

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த இங்கிலாந்து வீரர், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில்,  ,ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும் , இந்திய வீரர்கள், பும்ரா 4வது இடத்திலும் ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர்.