டெல்லி:

ந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது புதிய சாதனை என்று மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நான்கரை லட்சத்தை கடந்த நிலையில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. ஒவ்வொரு மாநிலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.
ந்தியாவில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைய 4.5 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 14,476 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதையடுத்து, தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளன.  இதைத் தொடர்ந்து,  நாடு முழுவது தினமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில் கொரோனா ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.  கொரோனா சோதனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளத.  தலைநகர் டெல்லியில் தற்போது நாள் ஒன்றுக்கு  18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்ற அளவுக்கு பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து   மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நாடு முழுவதும் நேற்று (23/06/2020)  மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 595 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
இந்திய அளவில் தற்போதுவரை 73 லட்சத்து 52 ஆயிரத்து 913 ரத்த மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  730 அரசு ஆய்வகங்கள்,  270 தனியார் ஆய்வகங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.