இந்திய தடகள வீரரின் புதிய தேசிய சாதனை

Must read

செக் குடியரசு

ந்திய தடகள வீரர் முகமது அனாஸ் யாகிய செக் குடியரசு ஓட்டப்ப்பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர்களில் முகமது அனாஸ் யாகியாவும் ஒருவர் ஆவார்.  இவர் தொடர்ந்து பல தடகளப் போட்டிகளில் கலந்து புதிய சாதனைகள் படைத்து வருகிறார்.   கடந்த ஆண்டு இந்தோநேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் நடந்த செக் குடியரசு தடகளப் போட்டிகளில் கலந்துக் கொண்ட முகமது அனாஸ் ஒரு புதிய தேசிய சாதனையை படைத்தார். 400 மீட்டர் தூரத்தை அவர் 45.24 நொடிகளில் கடந்து  புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டின் செக் குடியரசில் நடக்கும் தடகளப் போட்டியில் அவர் கலந்துக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டின் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முகமது அனாஸ் யாகியா மற்றுமொரு புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.  400 மீட்டர் தூரத்தை இம்முறை அவர் 45.21 நொடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையை தாமே முறியடித்துள்ளார்.  இதன் மூலம் அவர் உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

More articles

Latest article