தாயகம் திரும்பிய அபிநந்தனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பட்டாசுக்கள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

abhinandan

கடந்த மாதம் இந்திய வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடந்த்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் விமானப்படையை விரட்டி சென்ற விமானம் ஒன்றி அந்நாட்டிற்குள் விழுந்தது.

Wagah

அதிலிருந்து தப்பிய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். அவரை அந்நாட்டு வீரர்கள் சிறைப்பித்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து அவரை மீட்க வேண்டுமென இந்தியா முழுவதும் ஒருமித்த குரலெழுந்தது. அபிநந்தனை மீட்க துரித நடவடிக்கையை எடுத்த இந்தியா ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையிலும் ஈடுப்பட்டது. இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக ஒப்படைக்கும் பாகிஸ்தான் வெளியுறவுத்தூதரிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

School

அதன்படி, நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. அதனடிப்பையில், இன்று மாலை அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை வரவேற்பதற்காக எல்லையில் காலை முதல் ஏராளமான மக்கள் தேசியக் கொடியுடன் காத்துக் கொண்டிருந்தனர். அபிநந்தன் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடன் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஆங்காங்கே இனிப்புகள் வழங்கி, பட்டாசுக்கள் வெடித்து மேளதாளங்கல் ஒலிக்க தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தியினர்.

வான்வீரர், அன்னை இந்தியாவின் அபிநந்தன், ஆகாய நாயகன் உள்ளிட்ட பல பெயர்களால் அபிநந்தனை புகழ்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றனர். #welcomehero, #welcomehomeabhi உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.