இந்தியாவின் ஐந்து முக்கிய விமான நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி!

Must read

டில்லி,
ந்தியாவின் முக்கியமான  5 விமான நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதி செய்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநில எல்லையான  உரியில் உள்ள ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை அழித்தது.
terrosts
இந்த அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகள் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும்,5 க்கும் மேற்பட்ட முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. எல்லையோர கிராம மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்தியாவை நேரடியாக எதிர்கொள்ள துணிவில்லாத பாகிஸ்தான், பயங்கரவாதிகள் துணையோடு பின்புற வாசல் வழியாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள டெல்லி, காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் 5 மாநிலங்களில் உள்ள விமான நிலையத்தை தகர்க்க பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை யொட்டி ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள  22 விமான நிலையங்களும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவற்றில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் தணை ராணுவப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More articles

Latest article