Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

இந்தியாவின் முதல் பெண் இதய நோய் நிபுணர் 103 வயது பத்மாவதி கொரோனாவால் உயிரிழப்பு…

Aug 31, 2020

இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் பத்மாவதி (வயது 103) கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1917ம்ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில் உள்ள பர்மாவில் பிறந்த பத்மாவதி,  இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் 1942ம் ஆண்டு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

மருத்துவம் படித்து பட்டம் பெற்ற பத்மாவதி இந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராவார்.

காட் மதர் ஆப் கார்டியாலஜி என புகழப்பட்ட பத்மாவதி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனை யில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக,  தேசிய இதயநோய் மையம்  தெரிவித்துள்ளது.

டாக்டர் பத்மாவதி, பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி இருப்பதுடன்,  1967-ம் ஆண்டு டெல்லியில் உள்ள மெளலானா மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.  தொடர்ந்த,  முதல் இதய நோய் சிகிச்சைப் பிரிவையும் இந்தியாவில் தொடங்கினார்.

இவரது மருத்துவ சேவையை பாராட்டி, இந்திய அரசு, கடந்த 1967ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் 1992ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி  கவுரவித்தது.

 1962ம் ஆண்டு அகில இந்திய இதய அறக்கட்டளை நிறுவினார். பின்னர், 1981ம் ஆண்டு தேசிய இதய சிகிச்சை நிறுவனத்தை தொடங்கினார்.

Post navigation

31/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,956 பேர் பாதிப்பு, 91 பேர் பலி…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer