இந்தியாவின் முதல் கீமோதெரபி மருந்தை பெங்களூரைச் சேர்ந்த டாடா மெமோரியல் சென்டர் மற்றும் ஐடிஆர்எஸ் லேப்ஸ் ஆகியவை இனைந்து உருவாக்கியுள்ளது.
இது இந்தியாவின் முதலாவது மட்டுமன்றி ஒரே கீமோதெரபி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கு வாய்வழியாக திரவ வடிவில் வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 10000 குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தப் புற்றுநோயை கட்டுப்படுத்த இதுபோன்ற வாய்வழி கொடுக்கப்படும் 6-MP MERCAPTOPURINE எனும் கீமோதெரபி மருந்து பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அது வேறுநாடுகளில் அனுமதிக்கப்படவில்லை.
தற்போது முதல் முறையாக நிணநீர் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மெர்கேப்டோப்யூரின் (Mercaptopurine) வகை மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பவுடர் வடிவில் உள்ள இந்த மருந்தை திரவமாக்கி வாய்வழியாக வழங்குவதன் மூலம் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.