வாஷிங்டன்: வரும் 2020-2021 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.8% என்ற அளவில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது உலக வங்கி.

இந்த வளர்ச்சி விகிதம் 2019-2020 நிதியாண்டில் 5% என்பதாகக் குறைந்தது.

உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நிதிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட மந்தநிலையால், கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தது. இந்த நிதியாண்டு வரும் மார்ச் மாதம் 31ம் தேதியோடு நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த சரிவிலிருந்து வரும் நிதியாண்டில் இந்தியா மீளும் மற்றும் அந்த வளர்ச்சி விகிதமானது 5.8% என்பதாகவும் அதிகரிக்கும்.

அதேசமயம், வங்கதேச நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% என்பதற்கு அதிகமாகவே தொடரும் மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 3% என்ற அளவில் அதிகரிக்கும்.

அதேசமயம், வரும் நிதியாண்டில், உலகளவிலான பொருளாதார வளர்ச்சி சராசரி 2.5% என்பதற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறது அந்த அறிக்கை. இந்த அறிக்கையில், அமெரிக்கா, ஐரோபப் மற்றும் இதர நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.