இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடன் சுமை 100% க்கும் மேல் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் இலக்கை அடைய பெரிய முதலீடு தேவைப்படுவதால், இந்தியாவின் நீண்ட கால கடன் சுமையால் அபாயம் அதிகரித்துள்ளதாக IMF எச்சரித்துள்ளது.

இந்த சூழலை சமாளிக்க சலுகைகளுடன் கூடிய புதிய நிதி ஆதாரங்களை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லது அதற்கு நிகரான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.

மேலும் உலகளாவிய விநியோக இடையூறுகள் தொடர்ச்சியான பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடும், இது இந்தியாவிற்கு பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்கும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆபத்துகள் சமநிலையில் உள்ளதால் அதன் கடன் சுமை அதிகரித்து தாங்க முடியாத கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.

இருந்த போதும், IMF வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை இந்தியா ஏற்க மறுத்துள்ளது.