டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கம் ஓராண்டை கடந்தும் நீடிக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 1 கோடி சுகாதார ஊழியர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செயல்முறை முடிவதற்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகும் என்று கூறி உள்ளது.

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் இல்லை.  அது தனி நபர் விருப்பம் அடிப்படையிலானது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தனி நபர் மற்றும் சமூகத்திற்கு நல்லது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.