டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,59,613 ஆக உயர்ந்து 48,144 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 64,142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 24.59,613 ஆகி உள்ளது.  நேற்று 1,066 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 48,144 ஆகி உள்ளது.  நேற்று 54,776 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,50,636 ஆகி உள்ளது.  தற்போது 6,60,348 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 11,813 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,60,126 ஆகி உள்ளது  நேற்று 413 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,063 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,115 பேர் குணமடைந்து மொத்தம் 3,90,158  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,835 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,20,355 ஆகி உள்ளது  இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,397 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,146 பேர் குணமடைந்து மொத்தம் 2,61,459 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,996 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,64,142 ஆகி உள்ளது  இதில் நேற்று 82 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,378 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,499 பேர் குணமடைந்து மொத்தம் 1,70,924 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,706 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,03,200 ஆகி உள்ளது  இதில் நேற்று 103 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,614 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,609 பேர் குணமடைந்து மொத்தம் 1,21,242 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 956 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,49,460 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,167 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 913 பேர் குணமடைந்து மொத்தம் 1,34,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.