ரஷ்யாவிடம் எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

Must read

நியூயார்க்:

ரஷ்யாவிடமிருந்து நீண்ட தொலைவில் தாக்கக் கூடிய எஸ்-400 ஏவுகணையை வாங்க இந்தியா முடிவு செய்திருப்பது, பாதுகாப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.


நவீன ரஷ்ய தொழில்நுட்பத்துடன் கூடிய நீண்ட தொலைவில் தாக்கக்கூடிய ஏவுகணையை வாங்கிய முதல் நாடு சீனா.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணையை 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க இந்தியா முடிவு செய்தது.

இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

அமெரிக்காவிடம் இருந்து நீண்ட காலமாக ஆயுதங்கள் வாங்கி வந்த இந்தியா, ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்க முடிவு செய்தது அமெரிக்காவை அதிருப்தியடைய செய்துள்ளது.

இந்த முடிவு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது,

More articles

Latest article