துபாய் லாட்டரியில் 10 லட்சம் டாலர் வென்ற இந்தியர்கள்

Must read

துபாய்

துபாய் லாட்டரியில் இரு இந்தியக் குழுக்கள் தலா 10 லட்சம் டாலர் வெற்றி பெற்றுள்ளன.

துபாய் லாட்டரியில் வெற்றி பெறும் பணத்துக்குத் தீர்வை கிடையாது. \எனவே அங்குப் பலரும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கமாகும். இதில் பலர் குழுவாக இணைந்து லாட்டரி சீட்டு வாங்கி கிடைக்கும் பரிசை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். இது அங்கு வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு குழுக்களாக லாட்டரி சீட்டு வாங்குபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள்

நேற்று சமீபத்தில் வெளியான துபாய் லாட்டரியின் சீட்டுக்களுக்கான குலுக்கல்கள் நடந்தன. இதில் 307 ஆம் தொகுதியில் ஆன்லைனில் வாங்கப்பட்ட 2686 என்னும் எண் உள்ள சீட்டுக்கு 10 லட்சம் டாலர் பரிசு கிடைத்துள்ளது. இந்த சீட்டை சுதாகர் என்னும் இந்தியர் தலைமையில் 42 பேர் கொண்ட ஒரு குழு வாங்கியுள்ளது. இந்த பரிசை அவர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் 23,809 டாலர்கள் அதாவது ரூ. 17 லட்சம் கிடைக்கும்.

மற்றொரு குலுக்கலில் 10 இந்தியர்கள் கொண்ட மற்றொரு குழுவுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. 306 ஆம் தொகுப்பில் வாங்கப்பட்டுள்ள 2711 என்னும் சீட்டுக்கு 10 லட்சம் டாலர் கிடைத்துள்ளது. இதை இவர்கள் தலா 1 லட்சம் டாலராகப் பங்கிட்டுக் கொள்ள உள்ளனர், இந்திய மதிப்பில் இது ரூ.69 லட்சம் ஆகும்.

More articles

Latest article