பயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத் குற்றவாளி! பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Must read

இஸ்லாமாபாத்:

மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத், பயங்கரவாதத்துக்கு பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

பயங்கரவாதத்துக்கு நிதி வசூலித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹபீஸ் சயீத்தின் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்  குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டன. இந்த குற்றச்சாட்டுக்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறிய நீதிமன்றம் ஹபீஸ் சயீத் குற்றவாளி என அறிவித்து உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி ஹபீஸ் சயீத்தின் அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதிகள் முப்பையில் பயங்கர தாக்குதலை நடத்தினர். அந்த கொடூரமான தாக்குதலில் 6 அமெரிக்கர் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த பயங்கரவாதச் செயலுக்கு மூளையாக செயல்பட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் என்று புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது.

ஹபீஸ் சயீத்  தற்போது ஜமாத்-உத்-தவா என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அவரது  தலைக்கு அமெரிக்கா ரூ.65 கோடி என்று விலை நிர்ணயித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும், அமெரிக்க வெளி யுறவுத்துறையும் ஹபீஸ் சயீத்தை சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத் சில மாதங்களுக்கு லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த மாதம் 17ந்தேதி (July 17, 2019) அதிரடியாக கைது செயய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்மீது  இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மூலம் பயங்கரவாத நிதியிலிருந்து சொத்துக்களை வாங்கியதற்காகவும் ஜூடி, லஷ்கர்-இ-தைபா மற்றும் எஃப்ஐஎஃப் (ஃபலாஹ்-இ-இன்சானியத் அறக்கட்டளை) ,  பயங்கர வாத செயல்களை அரங்கேற்றுவதற்கு அவர்கள் நிதி திரட்டினர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புத் துறை 23 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது;k பயங்கரவாத தடுப்பு படையினர் பதிவு செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு  பாகிஸ்தான் குஜ்ரான்வாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து, ஹபீஸ் சயீத் குற்றவாளி என நீதி மன்றத்தால்அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர்மீதான இந்த வழக்கு பாகிஸ்தானில் உள்ள குஜராத் மாநில நீதிமன்றத்தக்கு மாற்றப்பட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article