மதுரை:

துரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அசால்டாக லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில், நடிகர் செந்திலுக்கு பணம் கொடுத்தால்தான், விண்ணப்பத்தில்  கையெழுத்து போடுவார். அதே  பாணியில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவருக்கு கையில் பணம் கொடுத்தால்தான், பைலை அடுத்த டேபிளுக்கு அனுப்புகிறார். அவர் அசால்ட்டாக லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்க ளுக்கு பதிவு செய்ய வரும் நபர்களிடம் லஞ்ச பணம் கேட்பதாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில் கடந்த மாதம் , வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச பணம் பெற்றதாக வட்டார போக்குவரத்து அலுவலரால் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

10க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், மதுரை மேலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் கிளையில் இருசக்கர வாகனத்திற்கு பதிவு செய்ய வருபவரிடம் 200 ரூபாய் லஞ்சம் பெறுவதாக வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைராலாகியுள்ளது.

இந்தியன் பட பாணியில் தன் மடியில் பைலை வைத்துள்ள சென்ட்ரல் வட்டார போக்குவரத்து கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி 200 ரூபாய் பணம் கையில் கொடுத்த உடன் தான் பைலை கம்ப்யூட்டர் பிரிவிற்கு பதிவு செய்ய கொடுக்கிறார்.

இதுபோன்ற லஞ்சப் பெருச்சாளிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்தியன் பட ஸ்டைலில் லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி – வீடியோ

தகவல்: பொதிகை குமார்