டில்லி

னைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களும் ஒரே தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாகத் தகவல்  வெளியாகி உள்ளது.

சீனாவில் ஊகான் நகரில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் முன்பு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்த நூற்றாண்டின் மாபெரும் பேரழிவாகி உள்ளது.  இதனால் கோடிக்கணக்கில் பாதிப்பு, மரணம் என பல வகையில் மனித குலம் பாதிக்கப்பட்டுள்ளது.  தவிர கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும் பல நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வர்த்தகம் சீர் குலைந்துள்ளது.

இது மட்டும் இல்லாது பல நாடுகளில் இந்த கொரோனா வைரசின் உருமாறிய திரிபுகள் வேகமாக பரவத் தொடங்கி உள்ளது.  உலகெங்கும் பல கொரோனா தடுப்பூசிகள் இருந்தாலும் இந்த உருமாறிய வைரஸ்களில் ஒரு சிலவற்றைக் கட்டுப்படுத்த இந்த தடுப்பூசி மருந்துகளால் முடியவில்லை.  எனவே இந்த உருமாறிய வைரஸ்களால் மேலும் மேலும் கொரோனா அலைகள் உருவாகின்றன.

இந்நிலையில் புவனேஸ்வர் இந்திய விஞ்ஞான கல்வி நிலையம் மற்றும் அசன்சால் காஜி நஸ்ரூல் பல்கலைக்கச்ழக விஞ்ஞானிகள் இணைந்து ஒரு தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளதாகவும் இந்த தடுப்பூசி அனைத்து வகையான உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிய வந்துள்ளது.   இது குறித்த தகவல் விஞ்ஞான பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள்

“இந்த ஆய்வில், கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக பாதுகாப்பு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக்கூடிய நோய் எதிர்ப்பு  சக்தியை உருவாக்கும் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தடுப்பூசியை கண்டறிந்துள்ளோம். எங்களால் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசி ஆன்டிஜெனிக் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது”

எனத் தெரிவித்துள்ளனர்.