டில்லி

ரே ஒரு டோஸ் மட்டும் போடப்படும் ஸ்புனினிக் லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடும்  பணி தீவிரமாக நடந்து வருகிறது.   இதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இந்திய அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் கேமலியா நிறுவனத் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு  இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அவசரக் கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது.  இந்த தடுப்பூசி மற்றவை  போல அல்லாமல் ஒரே ஒரு டோஸ் மட்டுமே போடப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம், “நாட்டில் கொரோனாவை எதிர்த்துப் போராட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பேருதவியாக அமையும்.    இந்த தடுப்பூசி தனியாரிடம் மட்டுமே கிடைக்கும்.  அரசு இதைக் கொள்முதல் செய்யவில்லை” என அறிவித்துள்ளது.