மெரிக்க சீனா வர்த்தகப்போரின் ஒரு பகுதியாக ஹவாய்  நிறுவனத்தின் மீதான தடை உலக அளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது.

ஹார்டுவேர் கருவிகளை குறைவான விலையில் கொடுப்பதால் எல்லா நாடுகளும் ஹவாய் நிறுவனத்தின் பொருட்களையே வாங்குவதாகவும் சொல்லப்படும் நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை எல்லா நாடுகளும் உற்று கவனிக்கவேண்டும். குறிப்பாக இந்தியா

அமெரிக்காவின் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்னவெனில் ஹவாயின்  ஹார்டுவேர் கருவிகள் மூலமாக உளவுப்பார்க்கப்படுகின்றன என்பதே. அதே போல் சீன நிறுவனங்கள் எந்த நாடுகளின் காப்புரிமையையும் மதிப்பதில்லை , எல்லா புதிய தயாரிப்புகளையும் உடனுக்குடன் குறைந்த விலையில் அதன் நகலை உருவாக்கி விடுகின்றன என்பதும் அமெரிக்காவின் 5 ல் 1 நிறுவனங்களின் காப்புரிமையை சீன நிறுவனங்கள் திருடிவிட்டதாக தெரிவிக்கின்றன.

இப்படி புதிய நுட்பங்களை எல்லாம் திருடி குறைந்த விலையில் கொடுத்துவருவதால்  தங்கள் நிறுவனங்களின் வியாபாரத்தினை  உலக அளவில்விரிவாக்கம் செய்துவருவதாகம் வரும் தகவல்கள் தரவுகளின் அடிப்படையில் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமே வளர்கிறது.

உலகின் மிக பிரபலமான நிறுவனங்களை எல்லாம் ஓரங்கட்டி ஹவாய்  நிறுவனம் வளர்ந்து வருவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. கீழேயுள்ள படத்தினை பார்த்தால் உங்களுக்கே புரியும்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்லா  ஹிவாவேய் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் அவை வேவு பார்க்க பயன்படுத்தப்படுகின்றனவா என்ற சோதித்து ஆராயும் உபகரணங்களை உருவாக்க இந்தியா உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். ஹிவாவேய் என்றில்லை எந்த நாட்டு பொருளும் நம்மை உளவு பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தோடு இந்திய அரசாங்கம் சில கொள்கைகளை உருவாக்கியே தீரவேண்டும்.

அதோடு நாம் கேட்கும் கேள்விகளுக்கும் முறைப்படியான பதிலை அவைகள் தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் சாதாரண பங்குதாரர் கேள்வி கேட்டால் கூட அவைகள் பதிலளித்தே ஆகவேண்டிய கட்டாயம் உண்டு. ஆனால் சீனாவில் இவைகள் எவற்றையும் நாம் எதிர்பார்க்க இயலாது.

ஏனெனில் அங்குள்ள பெரும்பான்மையான அதாவது 80% நிறுவனங்கள் அரசின் ஆதரவில்தான் இயங்குகின்றன. அதில் முதன்மையானது ஹவாய்.  அதுமட்டுமல்ல உலக அளவில் போட்டி போட சீனா 200 வியாபார குழுக்களை உருவாக்கியுள்ளது. அந்த நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு   qiye-jituans  என்று பெயர்.

எனவே இந்திய தொலைதொடர்பு துறையில் 5ஜி சேவையை வழங்க ஹவாய் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொலைதொடர்பு துறை உலக அளவில் வளர்ந்துவரும் ஒரு துறை. 2020 ல் இதன் மொத்த மதிப்பு 103.ன பில்லியன் கோடியாக இருக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் பல நாடுகள் இந்திய தொலைதொடர்பு துறையை இலக்காக வைத்துள்ளன.

இந்த சூழ்நிலையில் விலை குறைவு என்ற காரணத்திற்காக ஹவாய் நிறுவனத்திற்கு திட்டங் களை கொடுத்தாலும் அவர்கள் கொண்டுவரும் கருவிகளின் புறவாசல் வழியாக நம்முடைய தகவல்கள் எங்கும் செல்லாமல் இருக்க கண்காணிப்பு மிக அவசியம்.

இதை மத்தியம் அரசும் உணர்ந்தே இருக்கிறது என்றாலும் இந்த தொழில்நுட்பங்களில் இந்திய நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பினை செய்யவேண்டும். அதை மத்திய அரசும் ஊக்கப்படுத்த வேண்டும்

-செல்வமுரளி