புதுடெல்லி:

விமான நிலையகளில் உள்ளதை போன்று தானியங்கி டிக்கெட் பரிசோதனை எந்திரத்தை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்வே துறை சார்பில் புதிய தானியங்கி டிக்கெட் பரிசோதனை மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவிகளுடன் டிக்கெட் பெறும் போது மாஸ்க் அணிவ்துள்ளனரா? என்பது சோதனை செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த தானியங்கி எந்திரம் எப்படி செயல்படுகிறது என்று விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய எந்திரம் நாக்பூர் சென்ட்ரல் ரயில்வே டிவிசனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் ரயில்களில் பயணிக்கும் பயணிகளை இடைவெளியுடன் சோதனை செய்ய முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் இந்த எந்திரத்தின் முன்பு கைகளை நீட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும், பின்னர் டிக்கெட்கள் சோதனை செய்யப்பட்டு, பயணிகள் முகக்கவசம் அணிவது உள்ளனரா? என்பதை சோதனை செய்யும். இதையடுத்து உடல் வெப்ப சோதனை நடத்தப்பட்டு பயணிகள் ரயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்